மில் தொழிலாளி தற்கொலை
மில் தொழிலாளி தற்கொலை
விருதுநகர்
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள எம்.பி.கே. புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரன்(வயது 24). இவர் அப்பகுதியில் மில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவரும், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வயக்காட்டு காலனி தெருவை சேர்ந்த சுகந்தி என்பவரும் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்ததால் இருவரும் காதலித்து திருமணம் செய்து உள்ளார்கள். இந்தநிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. ஆகையால் மனைவி வீட்டை விட்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனவேதனையில் இருந்த மாரீஸ்வரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story