இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலம் அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

கெலமங்கலம் அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இளம்பெண்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காரப்பள்ளியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 50). இவரது மகள் லட்சுமி (21). இவருக்கும், ஜாகீர் ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்த முனிராஜ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் லட்சுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமடையவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இது குறித்து தகவல் அறிந்ததும் கெலமங்கலம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 2 ஆண்டுக்குள் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story