இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
சூளகிரி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
சூளகிரி
சூளகிரி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்ப தகராறு
சூளகிரி அருகே பருவீதி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது22). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது. இதனிடையே பெற்றோர் வீட்டுக்கு சென்ற மனைவியை ஊருக்கு வருமாறு அண்ணாமலை அழைத்துள்ளார்.
ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அவர் பெற்றோர் வீட்டு முன்பு விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.
தற்கொலை
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வள்ளியம்மாள் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.