வெவ்வேறு சம்பவங்களில் தோட்ட மேலாளர் உள்பட 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் தோட்ட மேலாளர் உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Feb 2023 2:00 AM IST (Updated: 7 Feb 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் வெவ்வேறு சம்பவங்களில் தோட்ட மேலாளர் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

தேனி

கூடலூர் நடு ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 40). தோட்ட தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் ராஜேஸ்வரிக்கு கடந்த சில வாரங்களாகவே அடிக்கடி மூச்சு திணறல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ராஜேஸ்வரி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதேபோல் கூடலூர் கிராம சாவடி தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (45). இவர், தனியார் தோட்டத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ராமகிருஷ்ணனின் மனைவி மற்றும் அவரது மகன், ராயப்பன்பட்டி அருகே சண்முகநாதர் கோவிலில் நடந்த தைப்பூச திருவிழாவுக்கு சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த ராமகிருஷ்ணன், மினிவிசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே வீட்டிற்கு திரும்பி வந்த அவரது மனைவி மற்றும் மகன், ராமகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இந்த இருவேறு தற்கொலை சம்பவங்கள் குறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story