விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை


விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தளி அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தளி அருகே உள்ள தளி கொத்தனூரை சேர்ந்தவர் பழனியப்பா. இவரது மனைவி நசம்மா (வயது 74). இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து நடந்தது. அன்று முதல் மூதாட்டி நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன வருத்தத்தில் இருந்த மூதாட்டி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story