2 வாலிபர்கள் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
மத்திகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை செய்து ெகாண்டனர்.
தொழிலாளி
ஓசூர் அருகே உள்ள கொத்தகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் கிரண் (வயது 23). தொழிலாளி. இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் இவரது காதலை அந்த பெண் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கிரண் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி கிரண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தற்கொலை
ராயக்கோட்டை அருகே உள்ள முகலூரை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் முனிரத்தினம் (27). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனிடையே முனியப்பன் மகனுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். ஆனால் முனிரத்தினம் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக தந்தை-மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த முனிரத்தினம் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர், உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.