விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெண் தற்கொலை

சூளகிரி அருகேயுள்ள கானலட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி ஷில்பா (வயது 31). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். சிவராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த ஷில்பா விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷில்பா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில், ஷில்பா சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் நேற்று மாலை, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அட்ட குறுக்கி என்ற இடத்தருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் சாலையோரம் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், தாசில்தார் அனிதா ஆகியோர் அங்கு நேரில் சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஷில்பாவின் கணவர் சிவராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story