இளம்பெண் தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பஜ்ஜேப்பள்ளி கீழ் தெருவை சேர்ந்தவர் வரதராஜ். இவருடைய மகள் சந்தனா (வயது 18). இவர் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார். இதனால் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். திருமணத்தில் விருப்பம் இல்லை என அவர் பெற்றோரிடம் கூறி வந்தார். இருப்பினும் அவர்கள் மாப்பிள்ளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்தனா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story