தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் நல்ல ஊருணி கிழக்குக்கரை பகுதியில் உள்ள புளியமரத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த சிங்கம்புணரி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்த அவர் அருகில் விஷம் கலந்த குளிர்பான பாட்டில் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. மேலும் அதன் அருகில் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவம் பார்த்ததற்கான மருத்துவ சீட்டு ஒன்றும் கிடந்தது. இதனை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட நபர் மேலூர் அருகே தெற்குத்தெரு பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி (60) என தெரியவந்தது. அவர் மாட்டு வண்டி போட்டிகளில் மாட்டு வண்டியை ஓட்டுபவர் என்றும், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என ெதரியவில்லை. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.