முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 4:00 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 70). இவர் வயிற்று வலி காரணமாக பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி உயிரிழந்தார். முதியவர் தற்கொலை தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story