வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
காரிமங்கலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரிமங்கலம்
காரிமங்கலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் தற்கொலை
காரிமங்கலம் அருகே உள்ள மன்னன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் ஜீவானந்தம் (வயது 21). இவருக்கு திருமணமாகி சபீனா என்ற மனைவியும், 11 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று சங்கர் குடும்பத்துடன் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு பூட்டி இருந்தது. இதனால் அவர் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது ஜீவானந்தம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
விசாரணை
இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையததிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.