படிக்காமல் விளையாடுகிறாயே என பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்த பிளஸ்-1 மாணவி சாவு
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள கால்வேஹள்ளியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகள் சங்கரி (வயது 16). இவர் காவேரிப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த மாதம் 13-ந் தேதி இவர் அருகில் உள்ள தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தார். இது குறித்து மாணவியின் பெற்றோர் படிக்காமல் விளையாடிக்கொண்டு இருப்பதாக கூறி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சிறுமி, வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story