கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை
மேச்சேரி அருகே கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்
மேச்சேரி
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த இளையராஜா மகன் இன்பசேகரன் (வயது 19), இவர், மேச்சேரி பகுதியில் ஒரு கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் உடன் தங்கி இருந்த மாணவர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று மாலை இளையராஜா தங்கி இருந்த விடுதி அறை உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னலை திறந்து பார்த்த போது அங்குள்ள மின்விசிறியில் இளையராஜா தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் இளையராஜா தற்கொலைக்கான காரணம் குறித்து மேச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story