குடும்ப செலவுக்கு கணவர் பணம் தராததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை-உதவி கலெக்டர் விசாரணை


குடும்ப செலவுக்கு கணவர் பணம் தராததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை-உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

பர்கூர்:

குடும்ப செலவுக்கு கணவர் பணம் தராததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா ஒட்டுமலை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 49). இவருடைய மகள் அபி (23). இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள செந்தாரப்பள்ளியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சீனிவாசன் கூலித்தொழிலாளி ஆவார்.

இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்தநிலையில் சீனிவாசன் கடந்த சில மாதங்களாக குடும்ப செலவுக்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று அபி, குடும்ப செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு சீனிவாசன் பணம் கொடுக்காமல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் அபி மனமுடைந்தார். மேலும் அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து பர்கூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அபி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் அபியின் தற்கொலை குறித்து கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு விசாரணை நடத்தி வருகிறார்.

குடும்ப செலவுக்கு கணவர் பணம் கொடுக்காததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story