வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை
சேலத்தில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் வெவ்வேறு இடங்களில் தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்
சேலத்தில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் வெவ்வேறு இடங்களில் தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவி
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஸ்தாஸ். இவர் குடும்பத்துடன் சேலம் அழகாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகள் ஸ்ரீத்தி (வயது21). இவர் அங்கு உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அழகாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாபர்உசேன். இவருடைய மனைவி பீஜா (25). இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் அழகாபுரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து பீஜா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.