மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் விஷம் குடித்து தற்கொலை
தாரமங்கலம் அருகே மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தாரமங்கலம்
தாரமங்கலம் அருகே மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மகன் சாவு
தாரமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டி கிராமம் சின்னகாடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 50). இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக தனது ஒரே மகன் விஜயுடன் தனது அண்ணன் சுப்ரமணியின் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் உடல்நிலை சரி இல்லாமல் விஜய் இறந்து விட்டார். மகன் இறந்த வேதனையால் மனம் உடைந்து காணப்பட்ட தாய் லட்சுமி, துக்கம் தாங்காமல் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார்.
தற்கொலை
இதையடுத்து நேற்று முன்தினம் வீட்டில் இருந்த விஷத்தை சாப்பிட்டு மயங்கினார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் லட்சுமியை உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.