போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் தற்கொலை


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் தற்கொலை
x

எடப்பாடி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை பிறந்த நாளில் இந்த சோகம் நடந்துள்ளது.

சேலம்

எடப்பாடி

எடப்பாடி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை பிறந்த நாளில் இந்த சோகம் நடந்துள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் மகன்

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சி கூடக்கல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குமுதா என்ற மனைவியும், ஜீவபாரதி (வயது 21), கவின் ஆகிய மகன்களும் இருந்தனர். ஜீவபாரதி திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். இதனால் அவர் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்று விட்டார். வீட்டில் ஜீவபாரதி மற்றும் அவருடைய தம்பி கவின் ஆகியோர் இருந்தனர். அப்போது திடீரென ஜீவபாரதி தனது அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். பின்னர் அவர் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை.

தற்கொலை

இதனால் சந்தேகம் அடைந்த கவின், கதவை திறந்து பார்த்தார். அப்போது ஜீவபாரதி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த கவின், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜீவபாரதியை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் குடும்ப பிரச்சினை காரணமாக ஜீவபாரதி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தந்தை பிறந்த நாளில் மகன் தூக்குப்போட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story