17 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை
சேலத்தில் 17 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
சேலம்
சேலம் கிச்சிப்பாளையம் காளிகவுண்டர் காடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் தீனா (வயது 17). சிறுவன் 10-ம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு மோளம் அடிக்கும் வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை வீட்டில் உள்ள அறையில் சிறுவன் தீனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் உடலை பார்த்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். சிறுவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story