பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை


பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தளி அருகே உள்ள நேரலட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் ரஞ்சிதா (வயது 15). பாலதொட்டனப்பள்ளி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டு வேலைகளை செய்யவில்லை என தெரிகிறது. இதுகுறித்து பெற்றோர் கேட்டனர். இதனால் மனமுடைந்த ரஞ்சிதா கடந்த 28-ந் தேதி தனது நிலத்தில் விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா இறந்தார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story