விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, நன்செய் இடையாறு, மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 73). தொழிலாளி. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உடல் நலம் சரியாகாததால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். மேலும் ராஜகோபால் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அவர் வீட்டில் விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ராஜகோபாலை மீட்டு உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் போலீசார் ராஜகோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story