மத்திகிரி, பேரிகை பகுதிகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை


மத்திகிரி, பேரிகை பகுதிகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Jun 2023 1:00 AM IST (Updated: 7 Jun 2023 7:44 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்திகிரி

மத்திகிரி, பேரிகை பகுதிகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து ெகாண்டனர்.

தனியார் நிறுவன ஊழியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி அருகே உள்ள பேளகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 34). தனியார் நிறுவன ஊழியர். கடன் பிரச்சினை காரணமான மனமுடைந்து காணப்பட்ட மஞ்சுநாத் கடந்த 4-ந் தேதி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வடமாநில தொழிலாளி

ஒடிசா மாநிலம் கொராபுட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிங்கு ஜானி. இவரது மகன் இந்திரா ஜானி (17). இவர் ஆனேக்கல் பகுதியில் தங்கி ஓசூர் பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இதனிடையே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இதனால் மனமுடைந்த இந்திரா ஜானி, பேரிகை அருகே புக்கசாகரத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story