செல்போன் கடைக்காரர் தற்கொலை
மொளசி அருகே செல்போன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிபாளையம்
செல்போன் கடைக்காரர்
பள்ளிபாளையம் அருகே மொளசி விட்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 43). கூலித்தொழிலாளி. இவரது கணவர் பழனிச்சாமி. இவர்களது மகன் சதீஷ்குமார் (22). செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி சம்யுக்தா (20). இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடம் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
கடந்த 31-ந் தேதி சதீஷ்குமார் வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சங்கீதா மற்றும் அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தாயார் பழனியம்மாள் மொளசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் தங்கமணி வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.