நாமக்கல் தனியார் தங்கும் விடுதியில் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை


நாமக்கல் தனியார் தங்கும் விடுதியில் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 1:09 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

வங்கி மேலாளர்

ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவகிரி. இவரது மகன் சிவகிரிகிரண் (வயது24). இவர் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 4-ந் தேதி நாமக்கல் வந்த இவர் நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும், சிவகிரிகிரண் தங்கி இருந்த அறை கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் பணியாளர்கள், ஜன்னல் வழியாக பார்த்து உள்ளனர். அப்போது சிவகிரிகிரண், அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தற்கொலை

இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு விடுதி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த நாமக்கல் போலீசார், சம்பந்தப்பட்ட தனியார் விடுதிக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று, சிவகிரிகிரண் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி மேலாளர் தற்கொலைக்கு காரணம் என்ன? ஆந்திராவை சேர்ந்த அவர் ஏன் நாமக்கல் வந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story