காதல் தோல்வியால் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


காதல் தோல்வியால் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 Jun 2023 12:30 AM IST (Updated: 9 Jun 2023 7:56 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிபின் தியுப் (வயது 18). இவர் தேன்கனிக்கோட்டை தாலுகா தேவகானப்பள்ளி பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 6-ந் தேதி உடல் நலம் சரியில்லை என்றும், அதனால் தான் வேலைக்கு வரவில்லை என்றும் அவர் தனது நண்பர்களிடம் கூறி அறையில் இருந்தார்.

இந்த நிலையில் அவரது நண்பர்கள் வேலை முடிந்து அறைக்கு வந்தபோது பிபின் தியுப் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் தளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் காதல் தோல்வி காரணமாக பிபின் தியுப் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story