தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை


தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 12 Jun 2023 2:55 AM IST (Updated: 12 Jun 2023 12:38 PM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறையை அடுத்துள்ள தாளக்கரைபுதூரைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 82). விவசாயி. இவர் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உடல் நலம் சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெரியசாமி மனமுடைந்து வீட்டின் வெளிப்புறம் உள்ள கொட்டகை விட்டத்தில், கயிற்றால் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பெரியசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story