மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை!
கொல்லிமலை அருகே பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் 11-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
சேந்தமங்கலம்
11-ம் வகுப்பு மாணவன்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே தின்னனூர் நாடு ஊராட்சியில் உள்ள மூல வளவுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். விவசாயி. இவரது மகன் முரசொலி மாறன் (வயது 18). இவர் கொல்லிமலை செம்மேட்டில் உள்ள அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் சில மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முரசொலி மாறனை பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் வற்புறுத்தி உள்ளனர். அதற்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தால் தான் பள்ளிக்கு செல்வேன் என மாணவன் பெற்றோரிடம் தெரிவித்தார்.
தற்கொலை
ஆனால் மோட்டார் சைக்கிள் வாங்கித் தர முடியாது என பெற்றோர் மறுத்துவிட்டனர். இந்தநிலையில் முரசொலி மாறனை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். இதனால் மனமுடைந்த முரசொலி மாறன் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முரசொலி மாறனின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் 11-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.