நாமக்கல் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை
நாமக்கல் அடுத்த வள்ளிபுரம் அருகே உள்ள கொக்கர செல்லியூரை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் நல்லுசாமி (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அவரது உறவினரின் தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire