கருப்பூர் அருகேபட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலைகாரணம் என்ன? போலீசார் விசாரணை


கருப்பூர் அருகேபட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலைகாரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 Jun 2023 2:03 AM IST (Updated: 17 Jun 2023 3:41 PM IST)
t-max-icont-min-icon
சேலம்

கருப்பூர்

கருப்பூர் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பட்டதாரி பெண்

சேலம் கருப்பூர் அருகே மாங்குப்பை அடுத்த பளையூர் சத்திரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரோகிணி (வயது 32). எம்.காம். பட்டதாரி. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில் நேற்று காலை ரோகிணி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

மேலும் ரோகிணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 ஆண்டுகளில் பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story