வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி
வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.
திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ் சரகம் நயினார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 56). இவரது மனைவி ஈஸ்வரி (49). இவர்களுடைய மகன் பொன்முருகன் (28). மோகன்ராஜ் பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மோகன்ராஜ் வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி, பொன்முருகன் ஆகியோர் அவரை காப்பாற்ற சென்றனர்.
அதில் அவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புவனம் போலீசார் மற்றும் மானாமதுரை தீயணைப்பு துறையினர் அங்்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் பலத்த காயத்துடன் கிடந்த மோகன்ராஜையும், ஈஸ்வரி, பொன்முருகனையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.