பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி


பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி
x

பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல்

பள்ளிபாளையம்:

ரூ.5 லட்சம் முறைகேடு

பள்ளிபாளையம் ஒட்டன்மெத்தை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் ஜவுளி நிறுவனங்களுக்கு வெள்ளை பெட்ரோல் வழங்கும் தொழில் செய்து வருகிறார். முருகன், ஜவுளி தொழில் செய்து வரும் வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு வெள்ளை பெட்ரோல் வழங்கி வந்தார். இதில் ரூ.5 லட்சம் வரை முருகன் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டுபிடித்த சீனிவாசன், முருகனிடம் பணத்தை கேட்டு வந்துள்ளார். அவர் பணம் தராததால், முருகனின் வீடு மற்றும் வீட்டு மனைகளை அபகரிக்க முயன்றதாக தெரிகிறது. இதில் முருகன் மனவேதனை அடைந்தார்.

தீக்குளிக்க முயற்சி

இந்தநிலையில் நேற்று முருகன் தனது தாய் சாவித்திரி, தங்கை கருணாதேவி ஆகியோருடன் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். திடீரென அவர்கள் தாங்கள் மறைத்து கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். தொடர்ந்து சீனிவாசன் தரப்பினரும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

போலீஸ் நிலையத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story