திருப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றபோது ஆற்றில் குதித்த தொழிலாளி- மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம்


திருப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றபோது ஆற்றில் குதித்த தொழிலாளி- மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
x

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் திருப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு மோட்டார்சைக்கிளில் சென்ற தொழிலாளி திடீரென ஆற்றில் குதித்தார்.

ஈரோடு

பவானி

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் திருப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு மோட்டார்சைக்கிளில் சென்ற தொழிலாளி திடீரென ஆற்றில் குதித்தார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ெதாழிலாளி

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆதித்யன். இவருடைய மகன் விஸ்வநாதன் (வயது 38).

இவர் அந்த பகுதியில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் அயனிங் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சந்தியா (28). மகள் லாவண்யா (4).

குடும்ப தகராறு

விஸ்வநாதனுக்கும், சந்தியாவுக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்து உள்ளது. இதனால் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்து வந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்து உள்ளது. இதனால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தன்னுடைய தாய் வீட்டில் கொண்டு விடும்படி சந்தியா கூறி உள்ளார்.

மோட்டார் சைக்கிளில்...

இதைத்தொடர்ந்து மனைவி சந்தியா, மகள் லாவண்யா ஆகியோரை அழைத்து கொண்டு மோட்டார்சைக்கிளில் திருப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு விஸ்வநாதன் சென்று கொண்டிருந்தார்.

ஈரோடு மாவட்டம் சித்தோட்டை அடுத்த அடுத்த பவானி லட்சுமி நகர் அருகே சென்றபோது கணவன், மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் லட்சுமி நகர் அருகே உள்ள காவிரி ஆற்று பாலத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி சந்தியாவுடன், விஸ்வநாதன் வாக்குவாத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆற்றில் குதித்தார்

வாக்குவாதம் முற்றியதில் விஸ்வநாதன் ஆத்திரம் அடைந்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாலத்தின் பக்கவாட்டு சுவரில் ஏறி காவிரி ஆற்றில் குதித்தார். தனது கண் எதிரே ஆற்றில் கணவர் விஸ்வநாதன் ஆற்றில் குதித்ததை கண்டதும், 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்,' என சந்தியா சத்தம் போட்டு கதறி அழுதார்.

அவருடைய சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுபற்றி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் சித்தோடு போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் தீயணைப்புவீரர்கள் அந்த பகுதியை சேர்ந்த நீச்சல் வீரர்களுடன் காவிரி ஆற்றில் இறங்கி விஸ்வநாதனை தேடினர். இரவு 7 மணி வரை தேடியும் விஸ்வநாதனை தீயணைப்பு வீரர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள் நிறுத்தினர். மீண்டும் நாளை காலை தேடும் பணி நடைபெறும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.


Next Story