பஞ்சப்பள்ளி அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து விஷம் குடித்தார்-ஆஸ்பத்திரியில் திவீர சிகிச்சை


பஞ்சப்பள்ளி அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து விஷம் குடித்தார்-ஆஸ்பத்திரியில் திவீர சிகிச்சை
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பஞ்சப்பள்ளி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து விஷம் குடித்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவி கர்ப்பம்

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவள் 14 வயது சிறுமி. இவள் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த மாணவிக்கும், மாரண்டஅள்ளி அருகே உள்ள சீங்காடு கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் கோபி (வயது 22) என்ற வாலிபருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோபி, மாணவி வீட்டுக்கு சென்றார். அங்கு யாரும் இல்லாத சமயத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.

விஷம் குடித்தார்

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வாலிபர் கோபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் போலீசுக்கு பயந்து கோபி நேற்று விஷம் குடித்து, தற்கொலைக்கு முயன்றார். வீட்டின் அருகே மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து விஷம் குடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story