ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 முதியவர்கள் தற்கொலை முயற்சி ஒருவர் சாவு


ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 முதியவர்கள் தற்கொலை முயற்சி ஒருவர் சாவு
x

செங்கம் அருகே ஒரே குடும்பத்ைத சேர்ந்த 3 முதியவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை

செங்கம் அருகே ஒரே குடும்பத்ைத சேர்ந்த 3 முதியவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 முதியவர்கள் விஷம் குடித்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 80). அவரது மனைவி சின்னபாப்பா (75). ராமசாமியின் அண்ணி ஜக்கம்மா (75). ஜக்கம்மாவிற்கு குழந்தைகள் இல்லாததால் ராமசாமி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

ராமசாமிக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் 3 மகன்கள் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். ராமசாமியின் மூத்த மகன் சேகர் (45), சென்னசமுத்திரம் கிராமத்தில் கூலி வேலை செய்து கொண்டு அவர்களை கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் ராமசாமி, சின்னபாப்பா, ஜக்கம்மா ஆகிய 3 பேரும் வயது முதிர்ந்த காலத்தில் தங்களால் எந்த பணிகளையும் செய்ய முடியாத காரணத்தாலும், குடும்பச்சூழல் காரணமாகவும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

ஒருவர் சாவு; 2 பேருக்கு சிகிச்சை

உடனே 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 3 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ராமசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சின்னபாப்பா, ஜக்கம்மா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சென்னசமுத்திரம் கிராம பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story