தீக்குளித்து வாலிபர் தற்கொலை


தீக்குளித்து வாலிபர் தற்கொலை
x

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட வாரணவாசி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் சூரிய தமிழன் (வயது 24). ஐ.டி.ஐ. படித்து முடித்திருந்த இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்தநிலையில் அவரது உறவினர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த இளங்கோவன் தனது மகனுக்கு அந்த உறவினர் வீட்டில் பெண் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்தாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சூரிய தமிழன் மதுபோதையில் வீட்டில் வைத்திருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில், உடல் கருகிய அவரை குடும்பத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சூரிய தமிழன் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story