தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திருப்பத்தூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர் அருகே இ.பி. காலனியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் அருண்குமார் (வயது 24), தனியார் பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்து வந்தார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அங்குநாயன பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகள் சாதனி பிரியா (19) என்பவரை காதலித்து 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
வீட்டில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் சாதனிபிரியா தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டு அங்கு சாதனிபிரியா கணவனை விவாகரத்து செய்துவிடுவதாக கூறியதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அருண்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.