தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து ெகாண்டார்

மதுரை

சோழவந்தான்

சோழவந்தான் அருகே அரசமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயன்(வயது 24). இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி சினேகா. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சினேகா கோபித்துக் கொண்டு அவருடைய தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த விஜயன் நேற்று மாலை யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story