ஆரணி அருகே மாற்றுத்திறனாளி தற்கொலை


ஆரணி அருகே மாற்றுத்திறனாளி தற்கொலை
x

ஆரணி அருகே மாற்றுத்திறனாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 40), மாற்றுத்திறனாளி. இவர் பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயக்கமடைந்து கிடந்தார்.

உடனே மகேந்திரனை குடும்பத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட மகேந்திரனுக்கு முனியம்மாள் என்ற மனைவியும், சுவேதா மற்றும் காவியா என்ற மகள்களும் உள்ளனர்.


Next Story