தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
தஞ்சையில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தஞ்சைமருத்துவக் கல்லூரி மனநல மருத்துவத்துறை சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
உலக தற்கொலை தடுப்பு தின பேரணி மற்றும் கருத்தரங்கம் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது. தற்கொலை என்பது எந்த ஒரு துயருக்கான தீர்வும் கிடையாது. அதனை எதிர்கொள்வது தான் வாழ்க்கைக்கு மிக முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவ, மாணவிகள் பங்கேற்பு
இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வாழ்க்கை கொண்டாடுவோம்" ஒரே நாளில் எல்லாம் மாறாது" போன்ற பல்வேறு தற்கொலைக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மருத்துவக் கல்லூரி பிரதான சாலைகளில் ஊர்வலமாக வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மருதுதுரை, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்டாக்டர் நமச்சிவாயம், சென்னை மனநலத்துறை பேராசிரியர் அசோகன், மனநலத்துறை தலைவர் மீனாட்சி, தாசில்தார் மணிகண்டன், நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலர் கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கருத்தரங்கமும் நடைபெற்றது. முடிவில் உதவி பேராசிரியை சண்முகபிரியா நன்றி கூறினார்.