கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை


கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை
x

கணவரின் கள்ளத்தொடர்பு பற்றி கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை


கணவரின் கள்ளத்தொடர்பு பற்றி கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

தகராறு

மதுரை செல்லூர் அருள்தாஸ்புரம் பெரியசாமி நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவருடைய மனைவி சுமதி (வயது 38). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுமதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, தற்கொலை செய்வதற்கு முன்பாக சுமதி, முதல்- அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தார். அந்த கடிதத்தை போலீசார் மீட்டனர். அதில், தன்னுடைய சாவுக்கு தன் கணவர் உள்ளிட்ட சிலர் தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

விசாரணை

சுமதியின் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் அந்த விரக்தியில் சுமதி தற்கொலை செய்து கொண்டதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story