பெயிண்டரை தாக்கிய தையல்காரர் மீது வழக்கு
பெயிண்டரை தாக்கிய தையல்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், அத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாட்ஷா (வயது 47). இவர் கரூர் மாவட்டம், காவல்காரன் பட்டியில் உள்ள ஒரு தையல்கடையின் மாடியில் வாடகைக்கு ஒரு அறை எடுத்து தங்கி பெயிண்டிங் ேவலைக்கு சென்று வருகிறார். காவல்காரன்பட்டியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தையல்கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனால் அக்பர்பாட்ஷாவும், சந்திரசேகரனும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்தநிலையில், கடந்த 25-ந்தேதி அன்று இருவரும் பேசி கொண்டிருந்தபோது, சந்திரசேகர், அக்பர்பாட்ஷாவின் மனைவி சைனம்புவை தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை அக்பர்பாட்ஷா தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகர் அக்பர்பாட்ஷாவை தகாதவார்த்தையால் திட்டி தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அக்பர் பாட்ஷா மனைவி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் சந்திரசேகர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.