சின்னவெங்காயம் விலை குறைந்தது


சின்னவெங்காயம் விலை குறைந்தது
x
திருப்பூர்


காங்கயம் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் விலை குறைந்தது. ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வாரச்சந்தை

காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது. இங்கு வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று 500-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறும். இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள், வீட்டு உபயோக பொருட்கள் முதற்கொண்டு அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. வார சந்தைக்கு காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.

இதன் காரணமாகவே வாரந்தோறும் திங்கட்கிழமை சந்தை நாளில் விவசாய தொழிலாளர்கள், தேங்காய் களம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலார்களுக்கு வார சம்பளத்துடன் விடுமுறை விடப்படுகிறது. இதனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் நகர பகுதி மக்கள் சந்தைக்கு வந்து செல்வார்கள்.

சின்ன வெங்காயம்

அதன்படி நேற்று நடந்த வார சந்தையில் முதல் தரமான சின்ன வெங்காயம் ரூ.40 விற்பனை செய்யப்பட்டது. இரண்டாம் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.15-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சின்ன வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் வாங்கி செல்பவர்கள் 7 கிலோ ரூ.100 க்கு வாங்கிச் சென்றனர். மேலும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்து காணப்படுவதால் வரும் நாட்களில் சின்ன வெங்காயத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story