கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்


கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே கோடைகால கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டது.

விழுப்புரம்

செஞ்சி:

செஞ்சி அருகே நெகனுார் கிராமத்தில் 14-வது ஆண்டு நெகனுார் கிரிக்கெட் கிளப் சார்பில் ஒரு மாதம் நடக்கும் கோடை கால கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த கிரிக்கெட் அணியினர் விளையாட உள்ளனர். விழாவில் விழுப்புரம் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காமராஜ் கலந்து கொண்டு, போட்டியை தொடங்கி வைத்தார். ஊராட்சி தலைவர் சித்ரா ஜெய்சங்கர், ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் முருகேசன் வரவேற்றார். தி.மு.க., கிளை செயலாளர் செல்வராஜ், அ.தி.மு.க., இலக்கிய அணி ஒன்றிய இணை செயலாளர் பொன்னுசாமி, பா.ம.க. சேட்டுரங்கநாதன், முத்து, டாக்டர் ராஜா, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் முனுசாமி, ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் குறிஞ்சிவளவன், விழாக்குழுவினர் பிரபாகரன், வெற்றிவேல், சுரேஷ் மற்றும் கிரிக்கெட் குழுவினர், கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 400-ம், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.30 ஆயிரத்து 200-ம் வழங்கப்பட உள்ளது.


Next Story