கோடை நெல் சாகுபடி பணி தீவிரம்


கோடை நெல் சாகுபடி பணி தீவிரம்
x

கோடை நெல் சாகுபடி பணி தீவிரம்

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் பகுதியில் கோடை நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோடை நெல் சாகுபடி

பூதலூர் வேளாண்மை வட்டார கிராமங்களில் காவிரி கரையோரத்தில் ஆழ்துளை கிணறு வசதி உள்ள பகுதிகளில் கோடை நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாற்றுப்பறித்தல் மற்றும் நடவுப் பணிகளில் எந்திரங்கள் மற்றும் ஆட்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் அகரப்பேட்டை மற்றும் திருக்காட்டுப்பள்ளி சரகத்திற்குட்பட்ட கிராமங்களான திருக்காட்டுப்பள்ளி, ஒன்பத்து வேலி, அலமேலுபுரம் பூண்டி, பவனமங்கலம் கூத்தூர், தீட்சசமுத்திரம் மற்றும் பல கிராமங்களில் கோடை நெல் நடவு பணிகள் நடந்து முடிந்துள்ளது.

2,625 ஏக்கர்

மேலும் சில கிராமங்களில் தற்போது நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டு இதுவரை 2,625 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாத இறுதிக்குள் மேலும் 2 ஆயிரம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை நெல் சாகுபடி பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், மேட்டூர் அணை திறக்கப்பட்டு பாசன வாய்க்கால்களில் வரும் தண்ணீரை கொண்டு குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் மேட்டூர் அணை திறப்பு அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

மேட்டூர் அணை

மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறப்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு முன்கூட்டியே வெளியிட்டால் அதற்கு ஏற்ற வகையில் முன்னேற்பாடுகளை செய்வதற்கு வசதியாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story