கோடை நெற்பயிருக்கு உரமிடும் பணி தீவிரம்
மெலட்டூர் பகுதியில் கோடை நெற்பயிருக்கு உரமிடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மெலட்டூர்;
மெலட்டூர் பகுதியில் கோடை நெற்பயிருக்கு உரமிடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோடை நெற்பயிர்
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள இரும்புதலை, இடையிருப்பு, கோவத்தக்குடி, ரெங்கநாதபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கோடை பருவத்தில் நெல் பயிர்செய்யப்பட்டுள்ளது.நடவு செய்து 30 நாட்களை கடந்த நிலையில் பயிர்களுக்கு இடையே மண்டியுள்ள களைகள் அகற்றப்பட்டு பயிர் வளர்ச்சிக்காக மேலுரமாக யூரியா மற்றும் டி.ஏ.பி. போன்ற உரங்களை இடும் பணியில் விவசாயிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தட்டுப்பாடு இன்றி...
நடப்பு ஆண்டு இரும்புதலை, இடையிருப்பு, கோவத்தக்குடி, ரெங்கநாதபுரம், சாலியமங்கலம், களஞ்சேரி, பள்ளியூர் அதனை சுற்றியுள்ள பகுதியில் கோடை சாகுபடியாக நெல் அதிகளவில் பயிர் செய்துள்ளனர்.நடவு செய்த வயல்களில் களை எடுப்பது உரம் இடுவது போன்ற பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி. போன்ற உரங்கள் அரசு கூட்டுறவு உர கிடங்குகளில் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதால் விவசாயிகள் சிரமம் இன்றி விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.