மாணவ-மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம்
நாகை மாவட்டத்தை சேர்ந்த 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையட்டு மைதானத்தில் கோடைகால பயிற்சி முகாம் வருகிற 1-ந் தேதி முதல் தொடங்குகிறது.
நாகை மாவட்டத்தை சேர்ந்த 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையட்டு மைதானத்தில் கோடைகால பயிற்சி முகாம் வருகிற 1-ந் தேதி முதல் தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடைக்கால பயிற்சி
நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் வருகிற 1-ந் தேதி முதல் தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த பயிற்சி முகாமில் தடகளம், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து மற்றும் ஆக்கி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த கோடைகால பயிற்சி முகாமில் கலந்துகொள்பவர்களுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படும்.
திறமையானவர்களை தேர்வு செய்து..
பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளில் திறமையானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு, மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தயார் செய்யப்படுவார்கள்.
மேலும் பயிற்சியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே, நாகை மாவட்டத்தில் உள்ள 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் இந்த கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.