கோடை கால பயிற்சி முகாம் நிறைவு


கோடை கால பயிற்சி முகாம் நிறைவு
x
தினத்தந்தி 19 May 2023 6:00 AM IST (Updated: 19 May 2023 6:00 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் கோடை கால பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.

நீலகிரி

ஊட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீலகிரி மாவட்ட பிரிவு சார்பில், விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகளை ஊக்குவித்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் கடந்த 1-ந் தேதி ஊட்டியில் தொடங்கியது. எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்து பந்து என 5 விளையாட்டிற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தினமும் பல்வேறு ஊட்டச்சத்துகள் வழங்கப்பட்டது. 15 நாட்கள் நடைபெற்று வந்த கோடை கால பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில் உதவி வன பாதுகாவலர் தேவராஜ், ஊட்டி நகராட்சி துணைத்தலைவர் ரவிக்குமார் ஆகியோர் பயிற்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர். இதில் கராத்தே சங்க செயலாளர் அறிவழகன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தடகள பயிற்சியாளர் ஜெயசந்திரன், கால்பந்து பயிற்சியாளர் செந்தில்ராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story