கோடை கால ஆக்கி பயிற்சி நிறைவு


கோடை கால ஆக்கி பயிற்சி நிறைவு
x
தினத்தந்தி 31 May 2023 3:30 AM IST (Updated: 31 May 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர், உபதலையில் கோடை கால ஆக்கி பயிற்சி நிறைவு பெற்றது.

நீலகிரி

குன்னூர்

கோடை விடுமுறையையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு கோடை கால பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஆக்கி நீல்கிரீஸ் அமைப்பு சார்பில் மாவட்ட அளவிலான கோடை கால ஆக்கி பயிற்சி முகாம் குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி, உபதலை அரசு பள்ளியில் நடைபெற்றது. பயிற்சி நிறைவு நாள் நிகழ்ச்சியில் பயிற்சி முடித்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஆக்கி மட்டை, உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் ஆக்கி நீல்கிரீஸ் அமைப்பின் துணைத் தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் பாலமுருகன் கலந்துகொண்டனர். முன்னதாக தலைவர் ஆனந்த கிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் ராசா நன்றி கூறினார்.


Next Story