தினமும் அதிகரிக்கிறது; மாவட்டத்தில் 101.48 டிகிரி வெயில் பொதுமக்கள் கடும் அவதி


தினமும் அதிகரிக்கிறது; மாவட்டத்தில் 101.48 டிகிரி வெயில் பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 101.48 டிகிரி வெயில் கொழுத்தியது. தினமும் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

வெயில் கொளுத்தியது

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த நாட்களை விட வெயில் கொளுத்தியது. அதன்படி நேற்று அதிகபட்சமாக 38.6 டிகிரி செல்சியஸ், அதாவது 101.48 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பம் பதிவாகியது. கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அனல் காற்று வீசியது. இதனால் லாரிகள், கன்டெய்னர்களை ஓட்ட முடியாமல் டிரைவர்கள் அவதானப்பட்டி ஏரி, மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள நீர் நிலைகள் அருகில் மரநிழலில் வாகனங்களை நிறுத்தினர்.

கடும் அவதி

கிருஷ்ணகிரி நகரின் முக்கிய முக்கிய பகுதிகளான பெங்களூரு சாலை, காந்தி ரோடு, சென்னை சாலை, சேலம் சாலை உள்ளிட்டவைகளில் நேற்று மதியம் முதல் மாலை வரை மக்கள் நடமாட்டமும் குறைந்தே காணப்பட்டது. சாலையோர கடை வியாபாரிகளும் வெயில் தாக்கத்தால் அவதியடைந்தனர்.

வெயில் தாக்கத்திற்கு பயந்து பெரும்பாலோனோர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கினார்கள்.

வெயிலின் உஷ்ணம்இரவிலும் காணப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.


Next Story