ரூ.14 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்


ரூ.14 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்
x

ரூ.14 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு, வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

அதன்படி 27 விவசாயிகள் 20 ஆயிரத்து 897 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.75.29-க்கும், குறைந்தபட்சம் ரூ.60.19-க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.14 லட்சத்து 12 ஆயிரத்து 578-க்கு வணிகம் நடைபெற்றது.

இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.


Next Story