சுண்டங்கோட்டைமுத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சுண்டங்கோட்டை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே சுண்டங்கோட்டை முத்தாரம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளான 13-ந் தேதி மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், அனுச்ஞை, அம்பாள் யாகசாலை எழுந்தருளல், முதல் யாக சாலை பூஜை, திரவிய ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், 2-ஆம் நாள் யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, அம்பாளுக்கு அபிஷேகம், 3-ஆம் காலயாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், யந்திர ஸ்தாபனமும் நடந்தது.
3-ம் நாள் காலையில் யாகசாலை பூஜை, வேதி அர்ச்சனை, யாத்ராதானம், கும்பம் எழுந்தருளல், விமானம் மற்றும் முத்தாரம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு விஷேச அலங்கார தீபாராதனை நடந்தது.
இதனைதொடந்து வைகாசி கொடை விழா தொடங்கியது. இவ்விழா இன்று(வியாழக்கிழமை) நிறைவுபெறுகிறது.